இல்லம் > விங்ஞான புதுமைகள் > பைட் முதல் ஷீட்டா பைட் வரை – விங்ஞான புதுமைகள்

பைட் முதல் ஷீட்டா பைட் வரை – விங்ஞான புதுமைகள்


ஒரு பொருளின் எடையை மில்லி கிராம், கிராம், கிலோ கிராம், டன்… என்று குறிப்பிடுவது போல மின்னணு சாதனங்களான கம்ப்யூட்டர் மற்றும் மெமரி கார்டுகளில் உள்ள நினைவுத்திறன் பைட், கிலோ பைட், மெகா பைட்…. என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு `பைட்’ (Byte) என்பது ஒரு எழுத்து ஆகும். உதாரணமாக `அ’ என்ற எழுத்தை கம்ப்யூட்டர் நினைவில் பதிவு செய்தால் அது `பைட்’ என்று கணக்கிடப்படும். எழுத்து மட்டுமல்ல, ஒரு காலி இடம் (Spacce) விட்டால் கூட அது ஒரு பைட் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இதற்கு அடுத்தபடியாக வருவது `கிலோ பைட்’ (Kilo Byte). ஒரு கிலோ பைட் என்பது ஆயிரம் `பைட்’ கள் சேர்ந்தது ஆகும். உதாரணமாக சொல்வது என்றால் ஒரு ஏ4 அளவுள்ள தாளில் இடம் பெறும் தகவல்கள் சராசரியாக ஒரு கிலோ `பைட்’ அளவில் இருக்கும். ஆங்கிலத்தில் கிலோ பைட் என்பதை சுருக்கமாக கே.பி. என்பார்கள்.

அடுத்து வருவது மெகா பைட் (MegaByte). 10 லட்சம் `பைட்’ டுகள் சேர்ந்தது ஒரு மெகா பைட் ஆகும். சுமார் 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் உள்ள தகவல்களை ஒரு மெகா பைட் என்று உதாரணத்துக்கு குறிப்பிடலாம். ஆங்கிலத்தில் இதை எம்.பி. என்று சுருக்கமாக கூறுவதுண்டு.

தொடர்ந்து வருவது ஜிகா பைட் (Giga byte). 100 கோடி `பைட்’ டுகள் சேர்ந்தது ஒரு ஜிகா பைட் ஆகும். சுருக்கமாக ஆங்கிலத்தில் இதை ஜி.பி. என்று அழைப்பார்கள். ஒரு முழு நீள தமிழ் சினிமா படத்தை ஒரு ஜி.பி. அளவில் அடக்கி விடலாம்.

லட்சம் கோடி பைட்டுகள் சேர்ந்தது டெரா பைட் (Tera Byte) என்று அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஜி.பி. சேர்ந்தது ஒரு டெரா பைட் ஆகும். சுருக்கமாக இதை டி.பி. என்பார்கள். ஒரு டெரா பைட் என்பதற்கு உதாரணம்:- என்சைக்ளோபீடியா எனப்படும் பல பாகங்கள் கொண்ட ஆங்கில கலைக்களஞ்சியத்தின் ஆயிரம் பிரதிகளை ஒரு டெரா பைட் அளவில் அடக்கிவிடலாம்.

அடுத்து வருவது பீட்டா பைட் (Peta Byte) . ஒரு பீட்டா பைட் என்பது ஒன்றுக்கு பிறகு 15 பூஜ்ஜியங்கள் கொண்டதாகும். அதாவது ஆயிரம் டெரா பைட் கொண்டது ஒரு பீட்டா பைட். சுமார் 50 ஆயிரம் கோடி பக்கங்கள் கொண்ட தகவல்களை ஒரு பீட்டா பைட் அளவில் பதிவு செய்து வைக்கலாம். இணைய தள சேவை நிறுவனமான கூகுள் ஒரு நாளில் 24 பீட்டா பைட் அளவுள்ள தகவல்களை கையாளுகிறது.

மிகப்பெரிய அளவாக இப்போது உருவாகி இருப்பது தான் ஷீட்டா பைட் (Zetta Byte). ஒன்றுக்கு பிறகு 21 பூஜ்ஜியங்கள் கொண்டது ஒரு ஷீட்டா பைட் ஆகும். மின்னணு அளவீடுகளில் இப்போதைக்கு மிகப்பெரிய அளவு இது தான். இதற்கு அடுத்தபடியாக யோட்டா பைட் (Yotta Byte) உள்ளது. ஒரு யோட்டா பைட் என்பது ஒன்றுக்கு பிறகு 24 பூஜ்ஜியங்கள் கொண்டதாகும். ஆனால் இந்த அளவு அங்கீகாரம் பெறவில்லை

நன்றி:-தினத்தந்தி

Advertisements
பிரிவுகள்:விங்ஞான புதுமைகள் குறிச்சொற்கள்:, , , ,
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: