இல்லம் > இன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி, கல்வி & வேலை > இன்றுமுதல் பி.இ.(B.E) விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி

இன்றுமுதல் பி.இ.(B.E) விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி


இன்றுமுதல் பி.இ. விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி

First Published : 03 May 2010 12:12:00 AM IST

சென்னை, மே 2:  தமிழகத்தில் பி.இ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 58 மையங்களில் திங்கள்கிழமை (மே 3) முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

விண்ணப்பங்கள் மே 29-ம் தேதி வரை வழங்கப்படும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்களின் 16 உறுப்புக் கல்லூரிகளில் 5,905 பி.இ. இடங்கள், 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் 2,560 இடங்கள், 3 அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2,465 இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,61,515 இடங்கள் என 456 கல்லூரிகளில் 1,72, 445 பி.இ. இடங்கள் உள்ளன.

இவற்றில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 58 மையங்களில் மே 3 முதல் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், சில குறிப்பிட்ட அரசு கலைக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்றவற்றில் வழங்கப்படுகின்றன.

அனைத்து மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பத்தை நேரில் பெறுவதற்கான கட்டணம் ரூ.500. எஸ்.சி., எஸ்.சி.ஏ., (அருந்ததியினர்), எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250.

விண்ணப்பத்தைத் தபாலில் பெற, “செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம்’, என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில், டி.டி. எடுத்து, செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 25 என்ற முகவரிக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்ப வேண்டும். தபாலில் பெறுவதற்கு எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவனர் ரூ.450-க்கும், மற்ற பிரிவினர்கள் ரூ.700-க்கும் டி.டி. எடுக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 31-ம் தேதிக்குள் ஏற்கெனவே, மேலே குறிப்பிட்ட முகவரியில் மாலை 5.30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதளம் மூலம்:

பி.இ. விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமும் பதிவு செய்யலாம். அதாவது

www.annauniv.edu/tnea2010

என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கேட்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து, சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும். பின்னர், அதை பிரிண்ட் எடுத்து, அதில் சம்பந்தப்பட்ட மாணவரின் புகைப்படத்தை ஒட்டி, கையெழுத்திட்டு, அந்த படிவத்தையும், டி.டி.யையும் இணைத்து மேலே குறிப்பிட்ட முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

பி.இ. தரவரிசைப் பட்டியல் ஜூன் 18-ம் தேதி வெளியிடப்படும்.

பி.இ. கலந்தாய்வு ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 25-ம் தேதி வரை நடைபெறும்.

சென்னையில் 4 இடங்களில் விண்ணப்பம்

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு மையம், குரோம்பேட்டை எம்.ஐ.டி., புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி ஆகிய 4 இடங்களில் பி.இ. விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. விண்ணப்பம் வாங்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை வழக்கம் போல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் மாணவர், பெற்றோர் வசதிக்காக, முதல் நாளான திங்கள்கிழமை காலை 6 மணி முதல் விண்ணப்பங்கள் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. தவிர, பல்கலைக்கழகத்தில் 20 கவுன்ட்டர்கள் அமைத்து பி.இ. விண்ணப்பங்கள் வழங்கப்படும். மற்ற மையங்களில் காலை 9.30 மணிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

1.80 லட்சம் விண்ணப்பங்கள்

பி.இ. மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஆண்டு மொத்தம் 1.6 லட்சம் விண்ணப்பங்கள்  விற்கப்பட்டன. அதை அடிப்படையாக வைத்து 2010-11-ம் கல்வி ஆண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கு 1.80 லட்சம் பி.இ. விண்ணப்பங்கள் முதல் கட்டமாக அச்சடிக்கப்பட்டுள்ளன.

எனவே, மாணவர்கள் தங்களுக்கு பி.இ. விண்ணப்பம் கிடைக்கும் கிடைக்காதோ என்ற சந்தேகம் கொள்ளவேண்டாம். விண்ணப்ப விநியோக மையங்களில் முதல் நாளே சென்று இடம் பிடிப்பதும் தேவையில்லை.

நன்றி:- தினமணி

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: