இல்லம் > கம்ப்யூட்டர் படை > கம்ப்யூட்டர் படை- வேல்ஸ்

கம்ப்யூட்டர் படை- வேல்ஸ்


சைக்கோ தாக்குதல் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. போகிறபோக்கில் பொதுக் கிணற்றில் விஷத்தைக் கலப்பது, ரயில் தண்டவாளங்களைத் தகர்ப்பது என எந்த எல்லைக்கும் போவார்கள். விஞ்ஞானம் வேறு வளர்ந்துவிட்டதா? உட்கார்ந்த இடத்தில் இருந்தே சகலக் கலகமும் நடக்கிறது!

ஒரு வங்கியை முடக்குவது, அல்லது வெப்சைட்டு களைச் செயல் இழக்கச் செய்வது போன்ற காரியங் களை வேலையாகவே வைத்துக்கொண்டு சைக்கோத் தனமாகத் திரிகிறார்கள் சிலர். தேடுதல் வலைதளமான கூகுள் துவங்கி டிவிட்டர், ஃபேஸ்புக் வரை அத்தனை பழுத்த மரங்களுமே இப்படிப்பட்ட அட்டாக்கைச் சந்தித்து இருக்கின்றன. 2009-ம் ஆண்டில் இப்படி நடந்த ஒரு அட்டாக்கின் பாதிப்பில் இருந்து கூகுள் ஒரு சில நிமிடங்களிலேயே மீண்டுவிட்டது என்றாலும், டிவிட்டரும் ஃபேஸ்புக்கும் இதில் இருந்து மீள ஒரு சில மணி நேரங்கள் ஆயிற்று.

சைக்கோ நோயாளிகளின் கையில் இருந்த சைபர் அட்டாக் என்ற ஆயுதத்தை ஒரு சில அரசாங்கங்களே கையில் எடுக்கும் விபரீதமும் இருக்கிறது. கடல் படை, விமானப் படை, காலாட் படை பட்டியலில் சில நாடுகள் கம்ப்யூட்டர் அட்டாக்கையும் ஒரு தனிப் படையாகத் சேர்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. உதாரணம், சீனாவில் கூகுள் படும் பாடு. ‘சென்ஸார்’ என்ற பெயரில் அரசுக்கு எதிரான வார்த்தைகளைக்கூட காட்டக் கூடாது என்று சீன அரசு கூகுளைத் துவக்கத்தில் இருந்தே குட்டிக்கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் சீனா, மனித உரிமை ஆர்வலர்களின் இ-மெயிலை உளவுபார்க்கத் தொடங்க, பொறுத்தது போதும் எனப் பொங்கி எழுந்தது கூகுள்.

ஒரு நாட்டின் அரசாகவே இருந்தாலும் சரி, தங்களின்வாடிக்கையாளர்கள் அனுப்பும் அல்லது பெறும் கடிதங்களை உளவுபார்ப்பதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று சொல்லி, கூகுள் சீனாவில் இருந்து வெளியேறிவிட்டது. கூகுள் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா, சீனாவின் கட்டுப்பாடுகளையும் செயல்களையும் ‘புதிய பெர்லின் சுவர்’ என்று வர்ணித்துக் கண்டனம் செய்தது. சீனாவில் இருந்து வெளியேறிவிட்டாலும் சீன மொழி பேசும் தனது வாடிக்கையாளர்களுக்காக சீன அரசின் கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லாத ஹாங்காங்கில் இருந்தபடி கூகுள் இப்போது செயல்படுகிறது. ஆனால், சீனாவுக்குள் இப்போது யாரும் கூகுளைப் பயன்படுத்த முடியாதபடி சீன அரசு அட்டாக் பாண்டியாக மாறி அதைத் தடுத்துவிட்டது!

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: