இல்லம் > மகளீர், மஞ்சள் மஞ்சக் கெழங்கே > மஞ்சள் மஞ்சக் கெழங்கே – ராஜம் முரளி

மஞ்சள் மஞ்சக் கெழங்கே – ராஜம் முரளி


பாடி ஸ்ப்ரே, சென்ட்… என்று ஃபாரின் நறுமண சமாசாரங்கள் புழக்கத்துக்கு வரும் முன்பே, நம் நாட்டுப் பெண்கள் க ண்டுபிடித்த வாசனைப் பொருள்தான் மஞ்சள். அது வெறும் வாசனைப்பொருள் மட்டுமல்ல… அழகைக் கூட்டும் மந்திர விஷயங்களும் அதில் ஏராளமாக அடங்கியிருக்கின்றன.

பருவை விரட்டலாம்!

இளமை துள்ளாட்டம் போடும் டீன் ஏஜை எட்டிப் பிடித்ததும், பலரும் சந்திக்கும் பிரச்னை முகப் பருக்கள்! அழகுக்கு சோதனையாக வரும் இந்தப் பருக்களால் உண்டாகும் வலி இன்னொரு தொல்லை. இதற்கான எளிய வைத்தியம் மஞ்சளிடம் இருக்கிறது.

பசும் மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துப் பூசி, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், பரு சீழ் பிடிக்காது. வலி குறைவதோடு, விரைவிலேயே மறைந்து விடும். முக்கியமாக, பரு உதிர்ந்த பிறகு வடு உண்டாகாது.

மென்மை கூட்டலாம்!

முகத்தில் தோல் சொரசொரப்பாக, கடினமாக இருந்தால் பசும் மஞ்சளோடு துளசியை சேர்த்து அரைத்துப் பூசுங்கள். விரைவிலேயே பட்டு போன்ற மென்மை முகத்தில் குடியேறும்.

கரும்புள்ளியைத் துரத்தலாம்!

பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் பளிச்சிடும் நிறம் கிடைக்கும். இதனுடன் 2 வேப்பிலையையும் சேர்த்துக்கொண்டால் அழகிய நிறம் கிடைப்பதோடு கரும்புள்ளிகளும் மறைந்துவிடும். அடர்ந்த கருமை நிறத்தவர்கள் இந்த முறையை பின்பற்றி னால் ஒரே வாரத்தில் நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பளிச் நிறம் வர, மற்றொரு வழி சொல்லட்டுமா?

கால் கிலோ கிழங்கு மஞ்சள், கால் கிலோ பூலாங்கிழங்கு, கால் கிலோ கஸ்தூரி மஞ்சள் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு எடுத்து 100 மி.லி தேங்காய் எண்ணெயில் கலந்து சூடாக்குங்கள். ஆறி, மேலாக தெளிந்ததும் அந்த எண்ணெயை உடலில் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு பயற்றம் மாவு அல்லது சோப்பு தேய்த்துக் குளித்தால் நாளுக்கு நாள் சருமம் மெருகேறி, அழகிய நிறம் பெறுவதை கண்கூடாக காணலாம்.

உலர்ந்த சருமத்தினர், நடுத்தர மற்றும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அற்புதமான சிகிச்சை இது.

அழகைக் கூட்டலாம்!

அரைத்துப் பூசினால்தான் என்றில்லை, மஞ்சள் கலந்த நீராவிகூட அழகைக் கூட்டும், தெரியுமா?! மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றை அரைத்து அதன் சாறை எடுத்து, கொதி நீரோடு கலந்து ஆவி பிடியுங்கள். பிறகு, அதே நீரில் இரண்டு வேப்பிலையைப் போட்டு ஆவி பிடியுங்கள். அடுத்து, ஒரு கைப்பிடி அளவு துளசியைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். பிறகு, 3 எலுமிச்சை இலை அல்லது அரைமூடி எலுமிச்சை சாறு சேர்த்து ஆவி பிடியுங்கள்.

இத்தனையும் ஒன்றன்பின் ஒன்றாக செய்து முடித்ததும், கடைசியில் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேயுங்கள். (சருமத் துவாரங்கள் விரிவடையா மல் இருக்க ஐஸ் ஒத்தடம் அவசியம்) பின்னர் ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பூசி முகத்தை அலசுங்கள். அப்புறம் பாருங்கள்… ‘நானே நானா.. மாறினேனா..!’ என்று உங்கள் விழிகள் விரியும். அந்தளவுக்கு துடைத்து வைத்த குத்துவிளக்காக உங்கள் முகம் ஜொலிக்கும்.

பசும் மஞ்சள் சீசனில்தான் கிடைக்கும். இதனை காயவைத்தால், அது கஸ்தூரி மஞ்சள். பசும் மஞ்சள் கிடைக்காத சீசனில், மாற்றாக கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம்.

வெடிப்பை நீக்கலாம்!

குண்டு மஞ்சள் கிழங்கு… கெட்டியாக இருக் கும் இந்த மஞ்சள் அதிக நிறம் கொடுக்கும். கூடவே, சருமத்தைக் கடினமாக்கிவிடும். அதனால், இது உடலில் பூச உகந்ததல்ல. ஆனால், பித்த வெடிப்பை போக்குவதில் மருந்தாகவே செயல்படுகிறது.

இந்த கிழங்கு மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் 1 டீஸ்பூன் கடுகைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து, பாதவெடிப்பு மீது பற்றுப் போடுங்கள். அரைமணி நேரம் ஊறவிட்டுக் கழுவுங்கள். தினசரி இதனை செய்துவர, வலி நீங்கி, பித்த வெடிப்பு மறைவதோடு பாதமும் மிருதுவாகும்.

‘வெடிப்பு இல்லை. ஆனால், என் பாதங்கள் டல்லடிக்கின்றன. அதனை அழகுபடுத்த வழி இருக்கா?’ என்பவர்களுக்கு இது… பாதங்களை ஷாம்பு போட்டு பிரஷால் தேய்த்து சுத்தம் செய்யுங்கள். ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியோடு ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை கலந்து பாதத்தில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். பிறகு எலுமிச்சம் பழத் தோலால் அழுந்த தேய்த்துக் கழுவுங்கள். நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இப்படிச் செய்தால், பளபளவென மின்னும் பாதம் கண்களில் ஒற்றிக்கொள்ளச் சொல்லும். இரவில் படுக்கப் போகும் முன் இதைச் செய்தால் சுகமான நித்திரை நிச்சயம்.

எல்லோருமே போடக்கூடிய மஞ்சள் ஃபேஸ் பேக் ஒன்றைப் பார்ப்போமா? முழு பாசிப் பயிறு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள், கசகசா தலா 10 கிராம், உலர்ந்த ரோஜா மொட்டு, பூலாங்கிழங்கு தலா 5 கிராம், எலுமிச்சை இலை, துளசி இலை, வேப்பிலை மூன்றும் சேர்த்தது 2 கிராம் _ இவற்றை மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதில் சிறிதளவு எடுத்து தயிரில் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் பூசி, பத்து நிமிடம் ஊறவிட்டுக் கழுவுங்கள். மாசற்ற பொன் முகத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்தான்!

****************************************************************************************

நன்றி:-ராஜம் முரளி

நன்றி:- அ.வி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: