இல்லம் > மகளீர் > வீடு சுத்தமாக இருக்க சில யோசனைகள் – சசிகலா ஸ்ரீனிவாஸ்

வீடு சுத்தமாக இருக்க சில யோசனைகள் – சசிகலா ஸ்ரீனிவாஸ்


வீடு சுத்தமாக இருக்க சில யோசனைகள்

‘சின்ன வயசுல எங்க வீட்டு பாப்பு உபயோகிச்ச ஃபீடிங் பாட்டில், தொட்டில்’ என்று நிறைய உணர்வுபூர்வமான சமாசாரங்கள் வீட்டில் இருக்கும். இந்த ‘எமோஷனல் ஃபீலிங்’ஸுக்கு இடம் கொடுக்காதீர்கள். கொடுத்தீர்களானால், வீடு இன்னொரு ‘ஸாலார்சங் மியூஸிய’மாகிவிடும்!

நிறைய வீடுகளில் ஒரு துடைப்பம் வாங்கினால், வருஷம் முழுக்க அதிலேயே குப்பை கொட்டப் பார்ப்பார்கள். அடிக்கடி நீண்ட தோகையுள்ள நல்ல துடைப்பங்களை வாங்குங்கள்.

குப்பைத் தொட்டிக்கு என்று தனிப்பட்ட முறையில் கார்பேஜ் பேக்ஸ் நிறைய அளவுகளில் கிடைக்கின்றன. அதை வாங்கக் கஞ்சத்தனம் செய்து, பலரும் ‘டஸ்ட் பின்’னுக்குப் பொருந்தாத ஏதோ ஒரு பையை மாட்டி வைப்பார்கள். இதனால் பாதிக் குப்பை தரையிலும் மீதிக் குப்பை பையைத் தாண்டி ‘டஸ்ட் பின்’னிலுமாகச் சிதறிப் போகும்.

பெண்களுக்கு எப்படி அவரவர் அளவுக்கேற்ற உள்ளாடையோ, அதுபோல்தான் இவையும் (‘ச்சீய்’ என முகம் சுளிப்பவர்கள், வேறு நல்ல உதாரணத்தைச் சொல்லுங்களேன்… பார்க்கலாம்!)

கிளீனிங் ஆரம்பிக்கும்போது, முதலில் டாய்லெட், கிச்சன் இவற்றில் ஆரம்பித்து, பின் படுக்கையறை, ஹாலுக்கு வாருங்கள். இல்லாவிட்டால், மீண்டும் மீண்டும் இடுப்பொடியத் துடைத்துக்கொண்டே இருக்க வேண்டிவரும்.

யாருக்கும் தெரியாமல் தூக்கியெறிய வேண்டும் என்கிற நினைப்பிலேயே சில பிரகஸ்பதிகள், ஒளித்து ஒளித்து வைத்து, பின் அப்பட்டமாக மாட்டிக் கொள்வது உண்டு.

உதாரணம்: பெண்டாட்டிக்குத் தெரியாமல் புருஷர்கள் ஒளித்து வைக்கும் விஸ்கி, பிராந்தி பாட்டில்கள், அல்பமான புகைப்படங்கள், வி.சி.டி|க்கள்!

மாமியார், கணவருக்குத் தெரியாமல் பெண்கள் பதுக்கும் புடவைக் கடை பில்கள், உருக்கிய ஈயச்சொம்புகள், உடைந்த பாத்திரங்கள், பூச்சி வந்த ரவை, பருப்புப் பொடி, சப்பாத்திக்குப் பிசைந்த மாவு (அளவே தெரியாமல் பிசைந்துவிட்டுத் தூக்கி எறிகிற பெண்களும் உண்டுங்க!)…

இவற்றை உடனுக்குடன் பைசல் செய்துவிடுவதுதான் உத்தமமான வழி!

சேர்ப்பானேன்… தவிப்பானேன்!

பொருட்களைச் சேர்ப்பதற்கு தேவைப்படுவதைவிட அதை அகற்றத்தான் நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. ஏனெனில், பிரிவு என்பது மனிதனைஅத்தனை பாதிக்கும் | அது, குப்பையாக இருந்தாலும் சரி!

குப்பையை ஸ்கீம் போட்டு அகற்றுவதைப் பற்றியெல்லாம் பாடம் சொல்ல நான் அறியேன். எனினும், ‘சேர்ப்பானேன்… தவிப்பானேன்!’ என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுகிறது.

இந்த அவசர காலத்தில், பொருள் ஈட்டவும் ஈட்டிய பொருளைச் செவ்வனே செலவிடவும் சேமிக்கவும் எவ்வளவு கடினமாக உள்ளது. செலவினங்கள் என்று எடுத்துக்கொண்டால் தேவையானவை, தேவையற்றவை எனச் சிக்கனம் கருதாமல், பல காரணங்களுக்காகப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம். விளைவு? குப்பை. சேர்ந்திருக்கும் குப்பைகளை அகற்றுவதைவிட, சேரவிருக்கும் குப்பைகளை அகற்றலாமே!

உணவு, உடை, குழந்தைகளுக்காக வாங்கும் பொருட்கள் என அனைத்திலும் நாம் சற்றே கண்டிப்பைக் காட்டப் பழகிக்கொள்ள வேண்டும். விளம்பரங்களுக்கோ போலி கெளரவத்துக்கோ இரையாகாமல் அது தேவையா என்று தீர முடிவு செய்தபிறகே பர்ஸை பிரியுங்கள்.

கூடவே, பழுதடைந்த பொருட்களைக் களைந்த பின்னரே, புதியதை வாங்குவதென உறுதியாக இருத்தல் வேண்டும். இப்படி வாங்குவதிலும் அகற்றுவதிலும் பாலன்ஸ் இருந்தால், வீடே (அத்தனை சுத்தம்) நமக்கு சோறு போடும்.

********************************************************************

நன்றி:- அ.வி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Advertisements
 1. 12:16 பிப இல் ஏப்ரல் 27, 2010

  அற்புதமான மற்றும் தேவையான பகிர்வு. வீட்டை சுத்தம் பண்ண யோசனை கிடைக்கும் என்று வந்தால் மனதையும் சுத்தம் செய்து விட்டீர்கள்.
  “இலவசமாக கொடுத்தாலும் தேவையில்லாத பொருளை ஒரு நாளும் வாங்க மாட்டேன்” என்று எனது நண்பர் அடிக்கடி சொல்வார்.
  அதன் அர்த்தம் இன்றுதான் விளன்கிக்கொண்டேன்.
  நன்றி.

 2. vasanthabai
  3:56 பிப இல் ஏப்ரல் 9, 2011

  ok

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: