இல்லம் > கவிதைகள், கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம், பாலையான வாழ்க்கை > பாலைவன வாழ்க்கை – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்.

பாலைவன வாழ்க்கை – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்.


பாலையான வாழ்க்கையைப்
பசுஞ்சோலையாய் ஆக்கவே
பாலைவன நாட்டுக்கே
பறந்து வந்த பறவைகள் நாங்கள்…

இச்சையை மறந்தோம்;
இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;
பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;
பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்…

இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;
இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;
“பொருளிலார்க்கு இவ்வுலகில்லை”

பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;

“இல்லானை இல்லாலும் வேண்டாள்;
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்; அவன்
சொல் செல்லாமல் போய்விடும்” என்றாள்
ஔவ்வையார் அன்றே……

மூதாட்டியின் மூதுரைக்கும்
முழுமையான விரிவுரை நாங்களே…
பாதாளம் வரை பாயும் பணமே

பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம்.

செல்பேசி:-00971-50-8351499

இவர்களின் படைப்புகளில் சில

ஏமாற்று உலகம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

உறவுகள்

பாலையான வாழ்க்கை

முரண்பாடுகளை முறியடிப்போம்

  1. 4:05 பிப இல் ஏப்ரல் 24, 2010

    எங்கள் ஊர் கவிஞரின் படைப்பு அருமை…

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s