இல்லம் > குழந்தை உணவு, மருத்துவம், Dr.நந்தினி > குழந்தை உணவு – Dr.நந்தினி முந்துகூர், பெங்களூர்

குழந்தை உணவு – Dr.நந்தினி முந்துகூர், பெங்களூர்


ஒரு வயது குழந்தைக்கு என்ன உணவு?
தாய்ப்பாலோ அல்லது புட்டிப்பாலோ குழந்தையின் முதல் ஆண்டில் அவனுடைய சத்துணவின் பெரும் பகுதியாக அமையும்.  பிறகு இதோடுகூட திட உணவை கூட்டி நிறைவு செய்யவேண்டும்.  இதனால் குழந்தை ருசி மற்றும் மணம் அறிய ஒரு புதிய வழி பிறக்கிறது.  முதலில் காரம் இல்லாத உணவு வகைகளைக் கொடுத்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காரம் மற்றும் மசாலா சேர்ந்த் பொருட்களை அறிமுகப்படுத்தலாம்.

தனிப்பட்டவர்களின் முன்னரிமைக்கு ஏற்ப பலவிதமான திட உணவுகளின் ஆரம்பிக்கும் வரிசை மாறுபடும்.  பொதுவாக, ஒரே தான்ய உணவு பெரும்பாலும் அரிசிசோறு ஆரம்பிக்கலாம்.  மற்ற தானியங்களை பிறகு அறிமுகம் செய்யலாம்.  அல்லது இன்று கடைகளில் அறிமுகப்படுத்தி விற்பனையாகும் முன்னால் பக்குவப்படுத்தப்பட்ட தானியங்களில் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம்.  பக்குவப்படுத்தப்பட்ட காய்கறிகளும், பழங்களும்கூட கொடுக்கலாம்.

குழந்தைகளால் சீக்கிரம் ஜீரணிக்கக்கூடியவைகளும், அவர்களால் விரும்பப்படுவதுமான பிசைந்த வாழைப்பழங்களும், கடைந்த ஆப்பிள்களும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் உணவு வகைகளில் எல்லோராலும் விரும்பப்படும் பொருள்களில் முதன்மை பெறும்.  உங்களிடம் மிக்சி இருந்தால் பெரும்பான்மையான எல்லா பழங்களையும், காய்கறிகளையும் அரைத்து குழந்தைகளுக்குக் கூழ் பதத்தில் கொடுக்கலாம்.  பருப்பு வகைகளையும் இதே முறையில் கொடுக்கலாம்.

உணவில் மிக அதிகமான சர்க்கரையையும், உப்பையும் சேர்க்காதீர்கள், அதிகப்படியான உப்பு உடம்பில் நீர் இல்லாமல் செய்துவிடும், அதிகப்படியான சர்க்கரை சொத்தைப் பல்லை உண்டாக்கும், பிற்காலத்தில் இதனால் பலவிதமான பிரச்சனைகள் உருவாகும்.

குழந்தையின் சுவை உறுப்பு, உங்கள் உறுப்பை விட நன்றாக வேலை செய்யக்கூடியது.  ஆகவே, அதற்கு அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் தேவையில்லை.  சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவுகளையும் புறக்கணிக்கக்கூடும்.  இது அநேகமாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்படுவது.  குழந்தை திட உணவை புறக்கணித்தால் அதனை சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள்.  திட உணவின் அமைப்பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறுபடுவதாலும், விழுங்கும் முறை வழக்கமான உறிஞ்சிக் குடிக்கும் முறையிலிருந்து வேறுபடுவதாலும் குழந்தை புறக்கணிக்ககூடும்.

குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் கவலைப்படாதீர்கள்.  அதனைக் கட்டாயப்படுத்தாதீர்கள்.  மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள் வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்குழம்பு போன்றவை. அப்பொழுதும் குழந்தை அவைகளை புறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.

ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும்.  அதன் ருசியையும் அதன் கெட்டித்ததன்மை¨யும் பழக்கப்படுத்திக் கொள்ளட்டும். அவன் சிறிது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி அவன் பசிக்கு ஏற்ப கொடுங்கள்.

குழந்தையைப் பெருக்ககு வைக்கும் எந்தவிதமான உணவையும் கொடுக்காதீர்கள் உதாரணமாக, அதிகப்படியான வெண்ணெய் அல்லது நெய், கிரீம் அல்லது தித்திப்பான முட்டையும், பாலும் சேர்ந்த தின்பண்ட வகை இவைகள் குழந்தையைப் பெருக்க வைக்கும், எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக முடிவில் தடித்த குழந்தையாக ஆகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனாவான்.  சிறுகச் சிறுக புதிய உணவு வகைகளில் குழந்தையின் அனுபவத்தை வளர்க்க வேண்டும்.  குழந்தை ஆறு மாதக் குழந்தையாகும்போது உணவில் சிறு பகுதி மாமிசம், மீன், கோழிக் குஞ்சின் இறைச்சி இவைகளைச் சேர்க்கலாம். ஆனால் இவை நன்றாகப் பக்ககுவப் படுத்தப்பட்டதாகவும், மிருதுவாக உள்ளதாயும் இருத்தல் அவசியம்.  குழந்தைக்கு நல்லது செய்யும் தயிரையும் தரலாம்.  கிச்சடி,  உப்புமா, இட்லி, பருப்பு போன்ற பலவிதமான வீட்டு உணவு வகைகளையும் கொடுக்கலாம்.  பலவிதமான உணவு வகைகளையும், பலவிதமான காய்கறிகள், பலவிதமான பழங்கள் முதலியவற்றையும் சேர்த்து குழந்தைக்குப் பிடித்தமான உணவைத் தயா¡¢க்கலாம்.

சற்றேறக்குறைய இந்த வயதிலேயே குழந்தை தன்னுடைய வாயில் எல்லாப் பொருட்களையும் போட்டக் கொள்வதைக் காணலாம்.  இப்பொழுது அதன் கையினால் எடுத்த சப்பி சாப்பிடத்தக்க உணவு வகைகளை அறிமுகம் செய்விக்கலாம்.  தானே சாப்பிடும் குழந்தைக்கு எல்லாம் ருசியாக இருக்கும்.  இது குழந்தையை திறமையுள்ளவனாகவும் மாற்றும்.  எல்லாக் குழந்தைகளும் வீட்டில் பரம்பரையாகச் செய்யும் அப்பத்துண்டகளைச் சாப்பிடும்.  கையில் பிடிக்கும் வகையிலான பெரிய தண்டு ரொட்டி அல்லது ஆப்பிள், வாழைப்பழம், காரெட்டு போன்றவை கொடுக்கலாம்.  அதிகமான கடின உணவைக் கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும்,  பற்களும் ஆரோக்கியமாக வளர உதவி புரிகின்றது.  குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது செளகரியமாக அமையும்.  விரல் போன்ற உருவில் இருக்கும் உணவுகள் இதே காலகட்டத்தில் குழந்தையின் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  ஆனால், தானே உணவு உட்கொள்ளும்போது குழந்தையைக் கவனமாக கவனிக்க வேண்டும்.  அவன் ஒரு துண்டைக் கடித்து மென்று பின் அதை விழுங்குவதில் கஷ்டப்படலாம் எனவே, அவனுக்கு கொட்டைகள், முலாம்பழம், தானியங்கள், உருளைக்கிழங்கு வறுவல், சாக்கலேட்டகள் முதலியவைகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள்.

குழந்தைக்கு திட உணவு வகைகளை கொடுக்கும் போது அவன் 6 அடி உயரம் உள்ள ஹிமான் போன்ற பலமிக்க பெரிய ஆளாக வளரப் போவதை மனதில் வைத்துக்கொண்டு அதிக உணவு படைக்காதீர்கள்.  சத்துணவு பற்றிய அறிவு உங்களை உணவுகளை நிறுத்தும், அளந்தும் கொடுக்கச் செய்யும்.  இது உங்களையும், உங்கள் குழந்தையையும் கிறுக்காக்கும்.  குழந்தையும் தன்னுடைய தட்டில் மிக அதிகமான உணவைக் கண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கும்.  குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள், அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள்.  குழந்தை எல்லா உணவுகளையும் ஒரு குறிப்பிட்ட உணவை சீக்கிரமாக சாப்பிட கற்றுக் கொள்ளும்.  சில குழந்தைகள் தாமதாமாக உண்ணும்.  எவ்விதமாயினும் உங்கள் குழந்தைக்கு சில பொதுவான வழக்கங்களை கற்றுக்கொடுக்க இது சிறந்த காலமாகும்.

 1. mathian
  4:15 பிப இல் பிப்ரவரி 5, 2011

  My daughter having small small reddish under neck.What is remedy?

 2. fathima
  8:51 பிப இல் ஏப்ரல் 9, 2011

  hi dr en babyku age 3 ahudhu innum sariyaha pechu varalai dr.ta kaamichadhuku vandrumguranga unga opinion sollaum pls pls

 3. vijayalakshmi
  9:29 பிப இல் ஜூன் 10, 2011

  hello dr.en girl baby monday vanthal 9months complete aagidum.aana ava ippo dhan thavalra utkara try panra..wait 9.119kg iruka ithu normal.na thaniya dhan kozhanthiya pathukuraen help kuda yarume illa… enna madiri food kudukalam…avaluku idly dosai pudikal satha raghi kanji dhan sapidura..pls help me..paalu innum vallara enna panalam?

 4. kavitha
  9:46 முப இல் பிப்ரவரி 17, 2012

  hi dr en girl babyku 5month complete ahuthu only mother feet ippo enna kodukalam aavin paal kodukalama.,wait 5.5kg iruka

  • kavitha
   4:11 பிப இல் பிப்ரவரி 25, 2012

   kavitha :
   hi dr en girl babyku 5month complete ahuthu only mother feet ippo enna kodukalam aavin paal kodukalama.,wait 5.5kg iruka

 5. 10:58 முப இல் மார்ச் 1, 2012

  hi i am sathyaramesh from attur.en babyku ithu 4th month avaloda food only mother feeding mattumthan,enaku helpku yarum illa so ella work um nanethan pannanum,mother milk avalukupothumanatha illai,ipo avaluku ena food kodukalam,biscut epo kodukalam ethanai kodukalam,pls help me,weight 5.700.

 6. susilamurali
  10:12 முப இல் மே 21, 2012

  Hi I am Susilamurali……….. My son 2 years old….. he is not eat any food…. only drink water and milk…last 3 weeks he is not eat any other food… weight 8.5… Please help me Dr…

 7. meena
  1:39 பிப இல் மார்ச் 12, 2016

  Hi I am meena… My son 2 years old… he is not eat any vegtables.. only rice …Plz help me..

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s