உம்ரா செய்யும் முறை


உம்ரா செய்வதற்கு முன் குளித்து உடலில் நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் உடையை அணிந்த பின் அல்லாஹீம்ம லப்பைக்க உம்ரத்தன் என்று உரிய எல்லையிலிருந்து (மீக்காத்திலிருந்து) நிய்யத்து வைத்துக் கொண்டு மக்காவிற்கு புறப்பட வேண்டும். இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்டு துணிகளை அணிவதாகும். ஒரு துணியை உடுத்துக்கொள்வது, மற்றத் துணியால் தன் மேனியை      போர்த்திக் கொள்வது. பெண்;களுக்கு தனி இஹ்ராம் உடை கிடையாது. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவுக்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். மக்கா செல்லும் வரை தல்பியா சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும்.

لَبَّيْكَ أَللَّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ، لاَشَرِيْكَ لَكَ.

லைப்பைக்க, அல்லாஹீம்ம லைப்பைக்க, லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக்க, இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லா ஷரீக்க லக்.

ஹரத்திற்குள் நுழைவதற்கு முன் தல்பியாவை நிறுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.

بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ أَللَّهُمَّ إفْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ.

தவாப்

ஹரத்திற்குள் நுழைந்ததும் தவாபை முதலில் ஆரம்பிக்க வேண்டும். தவாபை ஆரம்பிப்பதற்கு முன் ஆண்கள் தங்களின் வலது தோள்ப்புஜத்தை திறந்துவிட வேண்டும். அதாவது மேனியை போத்தியிருக்கும் துணியின் நடுப்பகுதியை வலது கக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு அத்துணியின் இரு ஓரங்களையும் இடது தோள் மீது போட வேண்டும். அதன் பின் உம்ராவிற்குரிய தவாபை நிறைவேற்றுகின்றேன் என்ற நிய்யத்தோடு ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலையிலிருந்து உம்ராவின் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாபை ஆரம்பிக்கும் போது மூன்று முறைகளில் ஒன்றைக் கொண்டு ஆரம்பிப்பது சுன்னத்தாகும்.

1- முடியுமாக இருந்தால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது.                    2- அதற்கு முடியாவிட்டால் கையினால் ஹஜருல் அஸ்வத் கல்லை தொட்டு கையை முத்தமிடுவது. 3- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை அதன்பக்கம் உயர்த்திக்காட்டி அல்லாஹீ அக்பர் என்று சொல்லுவது, இப்போது கையை முத்தமிடக்கூடாது. இம்மூன்றில் முடியுமான ஒன்றைச் செய்துவிட்டு தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாப் என்பது கஃபத்துல்லாவை ஏழு முறை பரிபூரணமாக சுற்றி வருவதற்குச் சொல்லப்படும். முந்திய மூன்று சுத்துக்களிலும் ரம்ல் செய்வது சுன்னத்தாகும். ரம்ல் என்பது கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பதற்குச் சொல்லப்படும். மற்ற நான்கு சுற்றுக்களையம் சாதாரணமான நடையில் நடப்பது. இப்படிச் செய்வது ஆண்களுக்கு மாத்திரம்தான் சுன்னத்தாகும். பெண்களுக்கு அல்ல.

ஒவ்வொரு சுற்றுக்களுக்கும் மத்தியில் குறிப்பிட்ட துஆக்கள் எதுவும் இல்லை, விரும்பிய துஆக்களை கேட்கலாம். தஸ்பீஹ், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல் போன்றவைகளை செய்து கொள்ளலாம். ருக்னுல் யமானியிலிருந்து அதாவது ஹஜருல் அஸ்வத் கல் மூலைக்கு முன் மூலையிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலை வரையுள்ள இடத்தில் ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்”” என்ற துஆவை ஓதுவது சுன்னத்தாகும்.

கஃபத்துல்லாவோடு சேர்ந்து ஒரு அரைவட்டம் இருக்கின்றது. அதையும் சேர்த்து தவாப் செய்ய வேண்டும், காரணம் அதுவும் கஃபத்துல்லாஹ்வின் எல்லைதான். தவாஃபுக்கு ஒழு அவசியமாகும். தவாஃப் செய்து முடிந்ததும் திறந்த வலது தோள்புஜத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு மகாமுல் இப்றாஹிமுக்குப் பின் சென்று தவாஃபுடைய இரு ரக்அத்து சுன்னத்துத் தொழ வேண்டும். முந்திய ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் காபிரூனும் (குல்யாஅய்யுஹல் காபிருன்), இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் இக்லாஸையும் (குல்ஹீவல்லாஹீ அஹது) ஓதுவது சுன்னத்தாகும். மகாமுல் இப்றாஹிமுக்குப்பின் நெருக்கமாக இருந்தால் ஹரத்தில் உள்ள வேறு எந்த இடத்திலும் தொழுது கொள்ளலாம்.

ஸஃயி

ஸஃயி என்பது ஸபா மர்வா மலைக்கு மத்தியில் ஏழு சுற்றுக்கள் சுற்றுவதாகும். தவாப் முடிந்த பின் ஸஃயி செய்வதற்காக ஸபா மலைக்குச் செல்லவேண்டும். கஃபத்துல்லாஹ்வை பார்க்கும் அளவு அதன்மீது ஏறி பின்வரும் துஆக்களை ஓதுவது சுன்னத்தாகும்.

لااِلَهَ اِلا اللهُ، ألله أَكْبَرُ، اَلْحَمْدُ للهِ، لاَاِلَهَ اِلاَّاللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ، لَهُ اْلمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ. لاَاِلَهَ اِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَأَعَزَّ جُنْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ. (رواه النسائي ، وابن ماجة)

லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹீ அக்பர், அல்ஹம்து லில்லாஹ், லாஇலாஹா இல்லல்லாஹீ வஹ்தஹீ லா ஷரீக்கலஹீ லஹீல் முல்கு வலஹீல் ஹம்து யுஹ்யீ வயுமீது வஹீவ அலா குல்லி ஷைய்யின் கதீர்;. லாஇலாஹா இல்லல்லாஹீ வஹ்தஹீ, அன்ஜஸ வஃதஹீ வனஸற அப்தஹீ வஅஅஸ்ஸ ஜுன்தஹீ வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹீ (ஆதார நூற்கள்: நஸாயி, இப்னுமாஜா)

இந்த திக்ருகளை மூன்று முறை ஓதுவது சுன்னத்தாகும். இவைகளுக்கு இடையே நமக்காக துஆக்கள் செய்வதும் சுன்னத்தாகும். நபியவர்களும் இப்படித்தான் செய்தார்கள், பின்பு ஸபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை முன்னோக்கி செல்ல வேண்டும், முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரைக்கும் சிறிது வேகமாக ஓட வேண்டும். அதன்பிறகு சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி வேகமாக ஓடுவது ஆண்களுக்கு மட்டும்தான் பெண்களுக்கல்ல. மர்வா மலையை அடைந்ததும் மர்வா மலை மீது ஏறி கிப்லாவை முன்னோக்கி சபா மலையில் செய்தது போன்று செய்வது சுன்னத்தாகும். இத்தோடு ஒரு சுற்று முடிவுறுகின்றது. பின்பு மர்வாவிலிருந்து ஸபா வரைக்கும் செல்வது, ஸபாவிலிருந்து வரும்போது இரு பச்சை விளக்குகளுக்கும் மத்தியில் சற்று வேகமாக ஓடியது போன்று இங்கேயும் சற்று வேகமாக ஓடுவது சுன்னத்தாகும். ஸபா மலையை அடைந்தால் இரண்டாவது சுற்று முடிவுறுகிறது. இப்படி ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும், ஒவ்வொரு சுற்றுக்கும் தனிப்பட்ட பிரார்த்தனை கிடையாது. விரும்பிய பிரார்த்தனைகள், திக்ருகள், குர்ஆன் ஓதுவது போன்றவைகளை செய்யலாம். இப்படிப்பட்ட சிறப்பான இடங்களில் மனமுருக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள்.

ஸஃயின் ஏழு சுற்றுக்களும் முடிவடைந்தபின் ஆண்கள் தங்களின் தலைமுடியை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். இதுவே சிறந்த முறையாகும். மொட்டை அடிக்காதவர்கள் முடியை குறைத்துக் கொள்ள வேண்டும். முடியை குறைத்துக் கொள்வதென்பது இரண்டு அல்லது மூன்று இடங்களில் சில முடிகளை கத்தரிப்பது என்பதல்ல, மாறாக தலையில் உள்ள எல்லா முடிகளும் கொஞ்ச அளவுக்காவது கத்தரிக்கப்பட வேண்டும், இதுவே நபிவழியாகும். பெண்கள் தங்களின் தலைமுடியின் நுனியில் விரல் நுனியளவுக்கு வெட்டிக் கொள்ள வேண்டும், இதுவே அவர்களுக்கு சுன்னத்தான முறையாகும், இத்துடன் உம்ராவின் செயல்கள் பரிபூரணமடைந்துவிட்டன. அல்லாஹ் எங்களின் உம்ராவையும் மற்ற அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக.

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: