இல்லம் > இளசை எஸ்.சுந்தரம், கவிதைகள், நாக்கு > நாக்கு – இளசை எஸ்.சுந்தரம்

நாக்கு – இளசை எஸ்.சுந்தரம்


குகைக்குள் புலி. . . !
வெளியில் வராமலேயே
வேட்டை நடக்கிறது.
எலும்பில்லாததுதான். . .!
எத்தனையோ பேரின்
எலும்பு முறிய. . .
காரணமாயிருக்கும்.
ஈரமானதுதான்.. . !
எத்தனை பேரின்
இதயங்களை
எரித்துப் போகும்.
எச்சிலுக்குள்ளே
இருப்பது ஏன் தெரியுமா. . .!
அசிங்கத்தைதப் பேசினால்
அலசிவிடவே
ஆண்டவனின் ஏற்பாடு.
தாலாட்டும்
பாராட்டும்
வாழ்த்தும். . .
வசவும்
ஒரே இடத்தில்தான். . .!
வசவை நீக்கி
வாழ்த்த முயன்றால். . .
வானம் வசப்படும்
வாழ்க்கை நிஜப்படும். . .!
நாக்குக்கும்
கற்பு உண்டு
அது. . .

மெளனம். . !

======================================
ஆக்கம்; இளசை எஸ்.சுந்தரம்
முன்னால் வானொலி நிலைய இயக்குநர், மதுரை.
(கவிதை பிரசுரமான இதழ்; கிழக்கு வாசல் உதயம்


Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: