இல்லம் > கட்டுரைகள், மருத்துவம், வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்., Dr.ஷேக் அலாவுதீன் > வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD

வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD


Pain & symptoms of disease – வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)   Zhejiang University, Hangzhou, (China) (Chinese Traditional Medicine).

எந்த ஒரு நோயும் மனிதனை உடனே தாக்குவதில்லை. சிறுக சிறுக தாக்கியப் பிறகே வலுவடைகின்றது. இதன் ஆரம்ப கட்டங்கள் நமக்கு சில சமிக்கைகள் கிடைக்கவே செய்கின்றன. அவைகளை நாம் புரிந்துக் கொண்டால் நோய்க்கான காரணத்தை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். முதலில் கைகளை எடுத்துக் கொள்வோம். கைகளில் உள்ள ஐந்து விரல்களின் மூலம் ஆறு வகை உறுப்புகளின் இயக்கத்தை தெரிந்துக் கொண்டு நோய்க்கான காரணத்தை விரைவில் ஒரு பைசா செலவில்லாமல் கண்டுபிடித்து விடலாம். நாடி பார்த்து 12 உறுப்புகளின் நோய் அறிவது அக்கு பஞ்சருக்கு இறைவன் அளித்த கலை. இதனால் தான் ஏற்படுவதில்லை இந்த மருத்துவத்தில் நோய் கண்டறிவதின் பிழை. இன்னும் சில வழிகளும் இருக்கின்றது நோய் கண்டறிய. அவைகளில் ஒன்று தான் கை விரல்கள் மூலம் நோய் அறியும் நிலை .
thumb

கை பெருவிரல் (THUMP FINGER)

கை பெருவிரல் வெளிப் பக்க ஓரத்திலிருந்து வலி ஆரம்பித்து நேராக முழங்கை மேல் பக்கம் நடுவில் சென்று பிறகு மேலே வலி முடியுமானால் அல்லது இதற்கு இடை இடையே வலியோ மரமரப்போ இருக்குமானால் இது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.

middle

ஆட்காட்டி விரல் (INDEX FINGER)

ஆட்காட்டி விரலில் ஆரம்பித்து முழங்கை வெளிப் பக்கமாக நேராக தோள்பட்டை மேல் சென்று மூக்கின் ஓரத்தில் முடியும். இந்த பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.

நடு விரல் (MIDDLE FINGER)

நடு விரல் இதயத்தின் மேல் உறையோடு சம்பந்தப்பட்டது. இதய நோயின் ஆரம்ப கட்டத்தில் அல்லது இதயத்தின் மேல் உறையில் ஏற்படும் பிரச்சினைகள் இந்த விரலில் ஆரம்பித்து உள்ளங் கை பக்கமாக வந்து கையின் நடுவில் நேராக சென்று அக்குளின் மேல் புறம் முடியும். இந்த பாதையில் அல்லது அதற்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் உபாதைகள் அனைத்தும் இதய உறை (PERICARDIUM) பாதிப்பை அறிவுறுத்தும் அறிகுறிகளாகும்.

ring

மோதிர விரல் (RING FINGER)

உடலில் வெப்ப நிலை மாறுபாட்டை அதனால் ஏற்படும் நோயின் அறிகுறிகளை மோதிர விரல் மூலம் அறியலாம். இந்த விரலில் ஆரம்பித்து கையின் பின்புறமாக சென்று தோள் பட்டை மேல் புறமாக காது வழியாக போய் கண் அருகில் முடிகின்றது. இந்த பகுதியல் ஏற்படும் பாதிப்புகளும் இந்த பாதை செல்லும் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்புகளும் உடலில் உஷ்ண நிலையில் கோளாறு உள்ளதையே காட்டுகின்றன.

small

சுண்டு விரல் (SMALL FINGER)

சுண்டு விரல் நகக் கண்ணில் (மோதிர விரல் பக்கம்) வலி ஆரம்பித்து அது உள்ளங் கை பக்கமாக வந்து மணிக்கட்டு ரேகையின் ஓரமாக போய் அக்குலில் முடியுமானால் அது உறுதியாக இதயத்தின் பாதிப்பைக் காட்டுகின்றது. சுண்டு விரல் நகக் கண் வெளிப் பக்கம் ஆரம்பித்து மணிக் கட்டு ஓரமாக போய் முழங் கை கீழாக சென்று தோள்பட்டையின் பின் பக்கமாக போய் காதின் ஓரத்தில் முடியும் பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறு குடல் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.

கவனம்சுண்டு விரலில் ஏற்படும் வலியின் போதும் நடு விரலில் ஏற்படும் வலியின் போதும் அலட்சியமாக இருப்பது இதயத்தையும் இதயத்தின் மேல் உறையையும் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதயத்தில் முதலில் பிரச்சினை வரும் போது அது நடு விரல் பாதையில் தான் அதிகமாக அறிகுறிகள் தென்படும். அதன் பிறகே சுண்டு விரல் பக்கம் வலி ஏற்படும்.

சரிதானா?நாம் இப்போது சிந்திப்போமானால் இது வரை நாம் செய்த செயல்கள் எந்த அளவுக்கு புறம்பானவை என்று அறியும் போது நமக்கே ஆச்சரியமாகவும் வெட்கமாகவும் தோன்றும். ஆம் கை வலிகளுக்கு இத்தனை காரணங்கள் இருக்க இவை எதனையுமே கருத்தில் கொள்ளாமல் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டது ஆச்சரியமானது ஒன்று மட்டுமல்ல மிக மிக அலட்சியமான ஒன்று. இப்படி மாத்திரை சாப்பிடுவதன் மூலம் சாப்பிடுபவர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணம் கிடைக்குமே ஒழிய நோய் (வலி) மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டேயிருக்கும்.மாத்திரை சாப்பிட்டால் மீண்டும் தற்காலிக சுகம் கிடைக்கும், அதே நேரத்தில் உள் பக்கமாக நோய் வளர்ந்துக் கொண்டே இருக்கும். நோய்க்கான காரணம் கண்டறியப் பட்டு அது சரி செய்யப்படாத வரை நோயிலிருந்து பூரண சுகம் என்பது கற்பனையே.நடப்பதென்னவலி ஏற்படும் போது நீங்கள் மதிப்பு மரியாதையுடன் பணம் கொடுத்து வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் வலியை நீக்குவதில்லை. அதற்கு பதிலாக வலிக்கின்றது என்ற செய்தி செல்கள் மூலமாக மூளைக்கு எட்டுவதை தடுத்துவிடுகின்றது (மேலும் விவரத்திற்கு மூளைக்கு சுய அறிவில்லை என்ற முந்தைய தொடரை படியுங்கள்), அதனால் நமக்கு வலி தெரிவதில்லை.

உதாரணம்:நம் உடலில் ஓர் ஆபரேஷன் செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம், மயக்க ஊசி போடாமல் செய்ய முடியுமா? முடியாது காரணம் வலியை தாங்க முடியாது, அதே நேரத்தில் ஆப்பரேஷன் செய்யும் பகுதியில் மயக்க ஊசி போட்டுவிட்டு செய்யும் போது ஆபரேசனை அவன் கண்கள் பார்க்கின்றன. ஆனால் வலி தெரிவதில்லை. எப்படி?

மயக்க ஊசி போட்டதால் அந்த பகுதி செல்கள் தற்காலிகமாக செயல் இழக்க செய்யப்படுகின்றன. அவைகளால் பாதிப்பின் செய்திகளை மூளைக்கு தெரிவிக்க முடிவதில்லை. அதனால் வலியை உணர முடிவதில்லை. வலி நிவாரண மாத்திரைகள் இதே அடிப்படையில் செய்யப்படுபவைகளே.

இங்கு  கால் விரல்கள் மூலம் எந்தெந்த உறுப்பின் பாதிப்பு நிலைகளை அறியலாம் என்பதை பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.மண்ணீரல் (SPLEEN) கல்லீரல் (LIVER), வயிறு (STOMACH), பித்தப்பை (GALL BLADER), சிறுநீர்பை (URINARY BLADER), சிறுநீரகம் (KIDNEY). இந்த உறுப்புக்கள் அனைத்தின் சக்தி பாதைகளும் கால் வழியே செல்கின்றன. இந்த உறுப்புக்கள் அனைத்ததும் ஆரோக்கியமாக இருந்தால் நமது கால்களும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும், நாமும் கவிதை பாடும் கால்களுக்கு சொந்தக் காரர்களாக இருப்போம்.

மண்ணீரல் (SPLEEN)

கால் பெரு விரலின் நகத்தின் வெளிப் பக்க ஓரத்தில் ஆரம்பித்து உள்ளங் கால் வெள்ளை நிறமும் புறங்கால் (பாதத்தின் மேல் பகுதி) நிறமும் சேரும் பாதை வழியாக கனுக்கால் பக்கமாக மேல்நோக்கி தொப்புளிலிருந்து 4 இன்ச் தூரத்தில் செல்லும் இந்த சக்தி பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் மண்ணீரல் சம்பந்தப்பட்டவை.

கல்லீரல் (LIVER)

கால் பெருவிரல் நகத்தின் மேல் பகுதியின் தோலும் நகமும் சேரும் மையப் பகுதியில் ஆரம்பித்து காலில் உள் பக்க ஓரமாக, முழங்கால் ஓரமாக சென்று மார்பு காம்புக்கு கீழே முடிகின்றது. இந்த பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் எல்லாம் கல்லீரல் சார்ந்தவையாகும்.

வயிறு (STOMACH)

கால் பெருவிரலுக்கு பக்கத்து விரலின் நகத்து ஓரத்தில் முடிவடையும் இந்த சக்தி ஓட்ட பாதை காலில் புறங்கால் பக்கமாக கால் எலும்பை ஒட்டி முழங்கால் வெளிப்பக்க வழியாக செல்கின்றது. கண் கீழ் இமை மைய பகுதியில் ஆரம்பிக்கின்றது இந்த சக்தி ஓட்டம். இந்த பாதை செல்லும் பகுதியில் ஏற்படும் அனைத்து நோயின் அறிகுறிகளும் வயிறு சம்பந்தப்பட்டவைகளாக இருக்கும். அதிகமானோர் இந்த சக்தி ஓட்ட பாதையில் ஏற்படும் பிரச்சினையில் பாதிக்கப்படுகின்றனர்.

பித்தப்பை (Gall Bladder)

கண்ணின் ஓரத்தில் ஆரம்பிக்கும் இந்த சக்தி ஓட்ட பாதை தலையில் சைடில் ஒரு வட்டமடித்து வயிற்று பகுதி வழியாக கீழிறங்கி வெளிப்பக்க தொடை மைய பகுதி வழியாக முழங்கால் வெளிப்பக்க ஓரமாக வந்து பிறகு கால் வெளிப்பக்க மைய பகுதி வழியாக சென்று கால் சுன்டு விரல் பக்கத்து விரலின் நகத்து ஓரத்தில் முடிவடைகின்றது. இந்த பகுதியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த பித்தப்பை சக்தி ஓட்ட பாதையில் ஏற்படும் தடங்களே காரனமாகும். ஒற்றை தலைவலிக்கு கதாநாயகனே இந்த சக்தி ஓட்ட பாதை தான்.மசாலா பொருட்களை அதிகம் சாப்பிட்டால் இந்த பாதையில் அதிகம் பாதிப்பு ஏற்படும். இரவு 11 மணிக்கு தூங்காமல் விழித்திருந்தாலும் இந்த பாதையில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே.

சிறுநீர் பை (URINARY BLADER)

“நீர் இன்றி அமையாது உலகு”

“சிறுநீர் பை சக்தியின்றி ஆரோக்கியமாகாது உடம்பு”

ஆம்,உடல் முழுவதும் பரவியிருக்கும் ஒரு மாபெரும் சக்தி ஓட்ட பாதை. ஏகப்பட்ட புள்ளிகளை தன்னகத்தே கொண்டு அழகாக ஆட்சி செய்யும் சக்தி ஓட்ட பாதை கண்ணின் ஓரமும் மூக்கின் ஓரமும் சந்திக்கும் இடத்தில் ஆரம்பித்து முதுகு பகுதியில் பரவி கால் கீழ் பகுதி வழியாக சென்று சுன்டு விரல் ஓரத்தில் முடிவடைகின்றது.கால் பின்பக்க பகுதியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் முழங்கால், முழங்கால் கீழ் ஏற்படும் பிரச்சினைகளும் தொடை பின்பக்கம் ஏற்படும் பிரச்சினைகளும் இந்த சக்தி ஓட்ட பாதையைச் சார்ந்தது. BACK PAIN இடுப்பு வழியின் துயரத்தை துடைத்து எறியும் ஓர் அற்புத பாதை. உடம்பில் எங்கெல்லாம் சூடு, எரிச்சல் ஏற்படுகின்றதோ உடனே நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு முடிவு செய்துக் கொள்ளலாம் அது சிறுநீர் பைக்கும் அது சம்பந்தப்பட்ட உறுப்புக்கும் அல்லது சம்பந்தப்பட்ட பகுதிக்கு தொடர்பு இல்லை என்று.

கண் எரிச்சல், தலையில் சூடு, வயிற்று எரிச்சல் (மற்றவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து வரும் வயிற்று எரிச்சலுக்கு சிறுநீர் பை காரணமாகாது), பாதத்தில் சூடு இன்னும் எங்கெல்லாம் உடம்பில் வெப்பம் எரிச்சல் உண்டாகின்றதோ அதற்கெல்லாம் காரணம் இந்த சிறுநீர் பைதான்.

சிறுநீரகம் (KIDNEY)

கால் பெரு விரல் எலும்பும் பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் உள்ளங்கால் பகுதியில் சிறுபள்ளமான இடத்தில் ஆரம்பிக்கின்றது இந்த சிறுநீரகத்தின் சக்தி ஓட்டம். பிறகு கனுக்காலுக்கு சற்று முன்பாக பெரு விரல் பக்கம் மேலேறி கனுக்கால் முழிக்கும் வெளிப் பக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதி வழியாக மேலேறி கால் உள் பக்கமாக சென்று தொப்புளை ஒட்டி மேல் நோக்கி போய் நெஞ்சு பகுதியில் முடிகின்றது. இந்த பகுதியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறுநீரகம் சம்பந்தப்பட்டவையாகும். அதிவேகமாக சாப்பிடும் அனைவரும் சிறுநீரகத்துக்கு ஆபத்தையே உருவாக்குகின்றார்கள். எந்த அளவிற்கு வேகமாக சாப்பிடுகின்றீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் சிறுநீரகத்தை பாதிப்படையச் செய்கின்றீர்கள் (பார்க்க: விட்டமின் மாத்திரையின் மறுபக்கம் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுரைகள்).கால் வலி என்றால் நாம் கவனிக்க வேண்டிய உறுப்புக்கள் இத்தனை இருக்க (மண்ணீரல், கல்லீரல், வயிறு, பித்த பை, சிறுநீர் பை மற்றும் சிறுநீரகம்) இவை அனைத்தையும் விட்டு விட்டு இவைகளில் எந்த உறுப்பு பாதிப்படைந்தால் இந்த கால் வலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, பாதத்தில் வலி இன்னும் பிற வலிகள் வந்திருக்கின்றது என்பதை கண்டறிந்து சரி செய்யாமல் மருந்துகள் வாங்கி சாப்பிடுவது, மசாஜ் கிரீம் வாங்கி தேய்ப்பது, வலி நிவாரனி எண்ணெய் வாங்கி தேய்ப்பது என்பது நோயை தீர்க்காது. தற்காலிக சுகத்தை வேண்டுமானால் தரலாம். தேய்த்துவிடுபவர் எதிர்மறையாக இருந்தால் சுகம் கொஞ்சம் கூடலாம்.

மற்றபடி நோய் தீராது. அது உள் நோக்கி வளர்ந்துக் கொண்டே இருக்கும். கால் முட்டியில் பிரச்சினை என்றால் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து சரி செய்து விட்டால் கால் முட்டியின் பிரச்சினை நிரந்தரமாக சரியாகும். அதை விட்டு விட்டு கால் முட்டியை மாற்றச் சொல்வது, நோயை விட்டு விட்டு நோயால் ஏற்பட்ட விளைவை மட்டும் சரி செய்வதாகும். நோயின் மூலத்தை சரி செய்யாமல் நோயின் விளைவை சரி செய்துவிட்டு நோய் குணமாகிவிட்டது என்று கூறும் உலக மகா அறிவாளிகள் வாழும் காலத்தில் நாம் வாழ்வதற்காக நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.

வயதான நபருக்கு முட்டியை மாற்றுகின்றீர்கள் வளரும் ஒரு 8 வயது சிறுவன் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு முழங்கால் முட்டியில் பிரச்சினை என்றால் என்ன செய்வீர்கள். அவன் வளர வளர 6 மாதத்திற்கு ஒரு முறை முட்டியை மாற்ற முடியுமா?

நாம் சிந்திப்போம், சரியான மருத்துவத்தை இனி மேல் சந்திப்போம்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த தொடரில் சந்திப்போம்.

– ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ –

நன்றி:-டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)

Advertisements
  1. kamaludeen
    3:28 பிப இல் ஒக்ரோபர் 7, 2013

    sir pls india adras

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: